லால்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
லால்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
லால்குடி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ. 439 அரசு நிர்ணயம் செய்துள்ளது ஆனால் லால்குடி நகராட்சியில் ரூ. 350 ஊதியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியமான ரூ.439 ஊதியம் வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த
நகராட்சி ஆணையர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது வெள்ளிக்கிழமை வரை தூய்மை பணியாளர்கள் காத்திருக்க வேண்டியும் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை செய்து குறித்து ஊதியம் குறித்து அறிவிக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லால்குடி தொகுதி செயலாளர் மரிய கமல், ஒன்றிய பொறுப்பாளர் தாமஸ் விக்டர், நகர பொறுப்பாளர் மணிரத்தினம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.