இராசா மான்ய துவக்கப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

0 271
Stalin trichy visit

.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சி தேவதானம் பகுதியில் உள்ள இராசா மான்ய துவக்கப்பள்ளியில் இன்று மதியம் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘வானவில் மன்றம்’ திட்டம் உருவாக்கப்
பட்டுள்ளது.

இந்நிலையில் பிச்சாண்டார்கோவில் ஊராட்சி தேவதானம் பகுதியில் உள்ள இராசா மான்ய துவக்கப்பள்ளியில்
கோடை விடுமுறையில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எளிய முறையில் எண்களை கணக்கிடுதல், அறிவியல் அற்புதங்கள், கணித விளையாட்டுக்கள், என பல நிகழ்வுகளை மாணவர்களுக்கு கருத்தாளர் கலைச்செல்வி விளக்கினார்.

இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் மெகருன்னிசா, சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் கணேஷ் (எ) விக்னேஷ்வரன், மகளிர்குழு சார்பில் மோகனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இறுதியில் அணைத்து மாணவர்களும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.