விடுதி உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…

0 636
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் விடுதி மாணவ மாணவிகள் இன்று மதிய உணவாக
குஸ்கா மற்றும் ரசம் சாதம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரசம் சாதம் உண்ட சுமார் 17 மாணவர்கள் 10 மாணவிகள் உட்பட அனைவருக்கும் வாந்தி மயக்கம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சக மாணவர்கள் அவசர ஊர்தி 108 மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அரசு மருத்துவர்கள் உடனடியாக அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே விடுதியில் உணவு சரியில்லை என மாணவ மாணவிகள் நிர்வாகத்தை முறையிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை என கூறி வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.