காதலி படத்தை வாகனத்தில் வரைந்தவர் மீது தாக்குதல் : 14 பேர் கைது

0 404
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, காளவாய்ப்பட்டி கிராமத்தில் ஒரு தலை காதல்முன் விரோதத்தால் தாய், மகன்களை தாக்கிய 14 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
காளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (19) இவர் தில்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் காதலியின் கண்களை தனது ஆட்டோவில் வரைந்துள்ளார். இதனையறிந்து பெண்ணின் உறவினர்கள் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் செல்வகுமாரை போலீசார் கண்டித்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவிலிருந்து பெண்னின் கண்கள் படம் அகற்றா ததால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் விக்ரம் (26) உள்ளிட்ட 14 பேர் காளவாய்ப்பட்டியில் செல்வகுமார் , அவரது தாய் கமலம் (40) செல்வகுமார் அண்ணன் கோபிநாத் (25) ஆகிய மூன்று பேரை சராமாரியாக தாக்கியும், ஆட்டோவை அடித்து நொறுக்கி உள்ளனர்.
இதனிடையே கோபிநாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்ரம் (26), சரண் (22) ,வினோத் (23) ,கெளதம் (35), சுதர்சன் (19),
பிரசாந்த் (22), லோகேஸ்வரன் (22), வேலவன் (20) ,குமரேசன் (28), பாலு (23), பிரவீன் (24), மணிமாறன் (33), சதி ஸ்(28), மணிகண்டன் (37), ஆகிய 14 பேரை மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் காயம் பட்ட செல்வகுமார் மற்றும் அவரது தாய், அண்ணன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மோதல் உருவாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.