துறையூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி காணொளி காட்சி மூலம் திறப்பு

0 247
Stalin trichy visit

திருச்சி, மே 15 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டம் துறையூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை இன்று திறந்து வைத்தார். துறையூரில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விடுதியை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் துறையூர் நகராட்சி தலைவர் செல்வராணி, துறையூர் ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா மோகன்தாஸ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.