பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழா : முன்னாள் எம்.பி. ப.குமார் அழைப்பு

0 812
Stalin trichy visit

அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348.வது சதய விழாவினை முன்னிட்டு திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவ சிலைக்கு..நாளை 23.5.2023 காலை 09.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.

அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகள் உள்ள சார்பு அணி நிர்வாகிகளும், செயல்வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.