ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 24.05.2023 புதன் கிழமை காலை திருக்கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் ஆ.இரவிச்சந்திரன் , கோயில் மேலாளர் தமிழ்செல்வி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி, உதவி கண்காணிப்பாளர்கள் மோகன் , அண்ணாதுரை , பழனிச்சாமி , ஆய்வாளர்கள் மங்கையர் செல்வி ,பாஸ்கரன் , பானுமதி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.