அரசு பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

0 470
Stalin trichy visit

விராலிமலை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற பொலிரோ ஜீப் அரசு பேருந்து மீது மோதி விபத்து. இருவர்‌ உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூர் அருகே வயதான மூதாட்டி ஒருவர் இறந்த துக்க நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஐந்து பேர் ஒரு பொலிரோ ஜீப்பில் கொடும்பாளூருக்கு சென்றுள்ளனர். கொடும்பாளூர் மூவர் கோவில் அருகே சென்ற போது திருச்சி மாவட்டம்,  வேம்பனூரில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஜீப் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ஜீப் இரண்டாகப் பிளந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே  பழனியப்பன், சதீஷ்  ஆகிய இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.