ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து

0 551
Stalin trichy visit

திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்த விபத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு பராமரிப்பாளர் 7 பேர் காயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க திருச்சியை சேர்ந்த 2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும்காளை பராமரிப்பாளர்கள் 7 பேர் சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பின் மீண்டும் திருச்சி செல்வதற்காக ஜல்லிக்கட்டு காளைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது கல்லகம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளும் காளையுடன் பயணித்த பராமரிப்பாளர்கள் 7 பேரும் காயமடைந்ததனர். இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்கள் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கல்லக்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.