வரகனேரில் உயர்கோபுர மின்விளக்கு : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருச்சி, மே 27 திருச்சி கிழக்குத்தொகுதிக்குட்பட்ட வரகனேரி கல்பாளையம் வார்டு என் 31 இல் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்ட செயலாளர்கள் சாகுல், கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.