பரமசிபுரத்தில் ஒருங்கிணைப்பு சமையல் கூடம் பணிகளை பார்வையிட்ட நகர்மன்ற தலைவர்..

0 387
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பரமசிவபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில்
லால்குடி நகராட்சி பள்ளிகளில் 1வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு சின்றுண்டி வழங்க ஒருங்கிணைப்பு சமையல் கூடம் பணிகளை நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் பார்வையிட்டார்.

தமிழக முதலமைச்சர் அறிவிப்பும்படி அரசு பள்ளிகளில் ஒன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு வரை நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க உத்தரவிட்டதின் பேரில் லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள 7 துவக்க பள்ளிகள் மற்றும் பூவாளூர் பேருராட்சிக்கு உட்பட்ட 4 பள்ளிகளில் பயிலும் 1049 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட பரமசிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பொது நிதியிலிருந்து ஒருங்கிணைப்பு சமையல் கூடம் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது பணிகள் நிறைவடையும் உள்ள நிலையில் பணிகளை நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் குமார் , நகர்மன்ற உறுப்பினர்கள், மதியழகன், துப்புறவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.