பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுன்டானாவில் கள்ளச்சாரய மரணம், சி.பி.ஐ விசாரணை, பூரண மதுவிலக்கு உள்ளிட்டைவைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்த
22 பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், கள்ளச்சாரயம் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அமைக்கவும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆணைக்கிணங்க திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில், லால்குடி ரவுண்டானாவில் லால்குடி ஒன்றிய செயலாளர் ஆங்கரை அரசகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தினகரன் கண்டன உரையாற்றினார். இலால்குடி நகர செயலாளர் மும்முடி குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.