சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனம் மோதி உயிரிழப்பு

0 256
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி
பகுதியில் நேற்றிரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற புள்ளி ஆண் மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில்
உடல் நசுங்கி உயிரிழந்தது

தச்சங்குறிச்சி மற்றும் எம் ஆர் பாளையத்தில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான், மயில், குரங்கு, காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரை தேடி வந்த ஆண் புள்ளிமான் ஒன்று சமயபுரம் சுங்கச்சாவடி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் அடிபட்டு சம்பவத்திலே பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விபத்தில் உயிரிழந்த புள்ளி மானை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக எம்.ஆர். பாளையம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.