மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளாளபட்டி ஊராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சியம்மாள் ( 65). சுக்காம்பட்டி பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்று மழையால் மின் கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. தரையில் இருந்து சுமார் 4 அடி கூட உயரம் இல்லாத நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை கவனிக்காமல் இன்று அதிகாலை அவ்வழியாகச் சென்ற மீனாட்சியம்மாள் அதனைக் கடக்க முயற்சித்தபோது அவரின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.