பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்டறிய கலந்தாய்வு கூட்டம்

0 680
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான வட்டார அளவிலான அனைத்து துறை அலுவலர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அந்த நல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் தலைமை தாங்கினார். அனைத்து துறை வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து ஒவ்வொரு துறை சார்பாகவும் 18 வயது வரை அந்த நல்லூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கிட ஆலோசனைகள் வழங்கினர் – இடைநின்ற மாணவர் ஒருவருக்கு அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான இணைய வழி பதிவு செய்யப்பட்டு உறுதிச் சான்று வழங்கப்பட்டது. இடைநின்ற மாணவர்கள் 2 பேர் 11 ஆம் வகுப்பு ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.