ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஒய்வில்லாமல் உழைத்து வருகிறார். அந்த வகையில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதிபடுத்திடவெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 9 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். அந்த வெளிநாட்டு கம்பெனிகள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றிடுவார்கள் இதை கவர்னர் ரவியால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. சாலை ஓரத்திலே வேலையற்றதுகள் அந்த வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள் வேந்தே அதுதான் காலக் குறி என்ற நிலை இருந்தால்தான் வடமாநிலங்களை போல மதக்கலவரங்களை உருவாக்கி மனிதர்களை பிரித்து சனாதன கொள்கைகளை நிறுவ முடியாமல் போகிறதே என்ற வேதனையின் வெளிப்பாடாக கவர்னர் உளறி வருகிறார்.
இந்திய நாட்டிலியே நூற்றுக்கணக்கான பல்கலைகழகங்கள், பல ஆயிரம் கல்லூரிகளை கட்டமைத்து கல்வி அறிவால் தமிழக மக்கள் முன்னேறி உள்ளதையும், மதக்கலவரமில்லாத மத நல்லிணக்கமுள்ள அற்புதமான மாநில மாக தமிழகத்தை ஆண்டு வருகின்ற தளபதி ஆட்சியில் தொழிற்ச்சாலைகளை அமைக்க சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிவருவதையும், பீகார், உபி, போன்ற வடமாநில மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்க்காக தமிழகம் நோக்கி வேலைவாய்ப்பிற்க்கு படை எடுத்துவருவதையும் கண்டு ஏற்பட்ட வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தும் விதமாக முதல் வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைபடுத்தி பேசிய கவர்னர் ரவியை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.
தினந்தோறும் பத்திரிக்கைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்க்காக தமிழக அரசை பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பொய்யான செய்திகளை பரப்பி வரும் ஆளுநர் ரவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. இதே நிலை நீடித்தால் ஜெயலலிதா ஆட்சியில் ஆளுநர் சென்னாரெட்டிக்கு ஏற்பட்ட நிலை ஆளுநர் ரவிக்கு விரைவில் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
இந்தியாவில் பா.ஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் தன்னிகரில்லாத வளர்ச்சியை உருவாக்கி நாடு போற்றும் நல்லாட்சியை புகழ்மிக்க பொற்கால ஆட்சியை கண்டு பொறாமை பட்டு நாள்தோறும் உளறல் பேச்சை உதிர்த்து வரும் ஆளுநர் ரவிக்கு அரசியல் செய்ய வேண்டும் என்று ஆசையிருந்தால் தமிழக பாஜக தலைவராகட்டும் அதன்பிறகு அரசியல் பேசட்டும் என்பதை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.