போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம்
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு அவர்கள் தலைமையில் திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரக மாவட்ட எல்லைகளில் உள்ள பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வாரந்தோறும் புதன்கிழமைகளில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினருக்கு உத்தரவு பிறபித்திருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு திரு.K.சங்கர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகத்திலுள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெற்றதா என்று கண்டறியும் வகையில் மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் இன்று (07.06.23)ந்தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகரில் உள்ள VSM திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்ந சிறப்பு முகாமில், மத்திய மண்டலகாவல்துறை தலைவர் G.கார்த்திகேயன் , திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவணசுந்தர், திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் சுஜீத்குமார், , கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம், , புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, செல்வகுமார், திருச்சி மாநகர துணை ஆணையர்(தெற்கு), சுரேஷ்குமார், திருச்சி மாநகர துணை ஆணையர்(தலைமையிடம்) அன்பு, திருச்சி மாநகர துணை ஆணையர்(வடக்கு),ஷியாமலாதேவி, காவல் கண்காணிப்பாளர் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் பெரோஸ்கான் அப்துல்லா காவல் கண்காணிப்பாளர் அரியலூர் மாவட்டம் ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர்.
இச்சிறப்பு முகாமில் திருச்சி மாநகரத்திலிருந்து 180 மனுக்கள், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களை அடக்கிய திருச்சி சரகத்திலிருந்து 203 மனுக்கள் என மொத்தம் 383 மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களிடம் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு அவர்கள் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தும், விசாரணை செய்தும் பெரும்பாலான மனுக்களில் 283 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இச்சிறப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு அவர்கள் பேசுகையில், முதலமைச்சர் அவர்கள் காவல்நிலையங்களில் பொதுமக்கள் தங்களது புகார்களை எந்த சிரமமுமின்றி பதிவு செய்ய வேண்டும் எனவும் அம்மனுக்கள் மீது குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.
இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளுக்கு தீர்வுகாணப்பட்டதற்கு சம்மந்தபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக பகுதிகளில் உள்ள மாணவ-மாணவியருக்கு போதை பொருட்களின் தீமைகள் குறித்தும், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்தும் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் & ஒழுங்கு சங்கர், தலைமையில் திருச்சி உறையூர் பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கத்தில் இன்று 07.06.2023-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைப்பெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, காவல் துணை அவர்கள், திருச்சி சரகத்தை சேர்ந்த காவல்துணை தலைவர், மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளிகளை சேர்ந்த கலை குழுவினர்களால் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 1600 ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர்கள், பொது நல மருத்துவர்கள் மற்றும் ஆத்மா போதை மறுவாழ்வு மைய மன நல ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போதை பொருட்களின் தீமைகள் குறித்தும் அதிலிருந்து விடுபட்டு வருவதன் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு அவர்கள் பேசுகையில், மாணவ மாணவிகள் அனைவரும் காவலர்கள் ஆகிவிட்டீர்கள் காவலர்களை போன்று கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிக்க பாடுபடவேண்டும். கஞ்சா பொருட்களின் விற்பனையை நாங்கள் தடுக்கிறோம் போதை பொருட்கள் தேவையை மாணவர்களாகிய நீங்கள்தான் தடுக்க வேண்டும். எந்த பொருளுக்கும் தேவையில்லை என்றால் விற்பனை இருக்காது என்று கூறி கஞ்சா போதை பொருட்களை ஒழிப்பதற்கான உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மாலை மாநகர காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரக காவல்நிலையங்களில் பணியமர்த்தப்பட்ட காவல் நிலைய வரவேற்பாளர் 60 நபர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு அவர்கள் பேசுகையில் எந்த புகார் வந்தாலும் உடனடியாக கணிப்பொறியில் பதிவு செய்தும், புகார்தாரரை நல்லமுறையில் உபசரித்து விசாரித்து அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் கொடுத்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டதா என மனுதாரரை விசாரித்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். காவல்நிலைய வரவேற்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் புகார் அளித்தால் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பகதன்மையை உருவாக்க பாடுபடவேண்டும்.
மேலும் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களுடன் முக்கிய வழக்குகளின் ஆய்வு கூட்டம் காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் & ஒழுங்கு சங்கர், தலைமையில் இன்று 07.06.2023-ஆம் தேதி மாலை மாநகர காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டலம் காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி சரக காவல்துணை தலைவர், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் திருச்சி சரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு அவர்கள் பேசுகையில் குற்றங்களை தடுக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பராமரிக்க பட வேண்டும் எனவும், பொதுமக்களிடம் குறைகளை நல்லமுறையில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.