கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார்
திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோவிலில் உடல்நிலை சரி இல்லாமல் கோயில் வளாகத்தில் தங்கி இருந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார். லால்குடி தேர்முட்டி தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மா (65). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அன்பில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் கோவில் அருகே திடீரென மாரியம்மாள் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாரியம்மா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.