லால்குடி பகுதியில் நாளை மின் தடை

0 269
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
எல். அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி, ஏகே நகர், பரமசிபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சனபுரம்,உமர் நகர், பாரதி நகர், வ உ சி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், இடையாற்று மங்கலம், மும்முடி சோழமங்கலம், பெரியவர்சீலி, மயில்ரங்கம், பச்சாம்பேட்டை, மேல வாலை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டகுடி சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.