அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : இடிமுரசு இஸ்மாயில் கண்டனம்
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய பாஜக அரசு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்ததை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
மாநில அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாடு தலைமை செயலகத்தின் உள்ளே புகுந்து சோதனை செய்தது மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். ஒரு அமைச்சரை கைது செய்திட உரிய சட்ட நடவடிக்கைகளை மீறி கைது செய்து அவருக்கு நெஞ்சுவலி வரும் அளவுக்கு டார்ச்சர் செய்தது மாநில அரசை மிரட்டும் நடவடிக்கை ஆகும். ராணுவத்தையும் அமலாக்க துறையையும் வைத்து எதிர்கட்சி அரசுகளை மிரட்டிவரும் ஒன்றிய அரசுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களும், இந்திய மக்களும் பாடம் புகட்டுவார்கள் என பிரதமர் மோடி அவர்களை எச்சரிக்கிறேன்.
சோதனையான இக்காலகட்டத்தில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகமும், தமிழக முஸ்லீம்களும் மாண்புமிகு முதலமைச்சர் நல்லாட்சியின் நாயகன் தளபதி மு.க.ஸ்டாலின்-க்கு துணை நிற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.