மாமன்னர் கரிகால் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 420
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 15 கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு திருச்சி மாவட்டம் முக்கொம்பு வந்தடைந்தது. இன்று காலை 10.00மணி அளவில் திருச்சி மாவட்ட விவசாயிகள் சார்பாக முக்கொம்பில் காவிரி தாயை வாழ்த்தி வணங்கும் வகையில் காவிரியில் மலர் மற்றும் விதை நெல் தூவி சிறப்பு செய்யப்பட்டது. முன்னதாக கல்லணையை கட்டி காவிரிக்கு கரை அமைத்து பாசனத்தை முறைபடுத்திய மாமன்னர் கரிகால் சோழன் சிலைக்கும், திருச்சி மாவட்டம் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டி டெல்டா மாவட்டங்களை வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாத்த ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் சிலைக்கும் அயிலை சிவசூரியன் தலைமையில் மாலை அணிவித்து மாயாதை செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.