பள்ளிக்கல்வித் துறை அமைச்சருடன் ரோபாட்டிக்ஸ் பயிற்சியாளர்கள் சந்திப்பு
திருச்சி, ஜுன் 17 2022- 23 ஆம் கல்வி ஆண்டில் திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், திருவரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 125 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுe boatஅகடமியின் நிறுவனர் எழில்வாணி முயற்சியால் 300 மாணவர்களுக்கு இலவசமாக ரோபாட்டிக்ஸ் பயிற்சி 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. மாணவர்கள் சிறப்பாக கற்றுக் கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.

அதன் விளைவாக மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு திறனைப் பெற்று சிறப்பான எதிர்காலம் பெற இயலும் என்பதை உணர்ந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கையை ஏற்று இன்னும் சில அரசுப் பள்ளிகளுக்கு
ரோபாட்டிக்ஸ் பயிற்சியை தமிழ் நாடு அரசுடன் இணைந்து செயல்படுத்த வேண்டி இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி நடத்துவதுகுறித்து
e-boat ரோபாட்டிக்ஸ் பயிற்சி நிறுவனர் எழில்வாணி சந்தித்து உரையாடினார்.