வரதராஜ பெருமாள் திருக்கோயில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம்லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருகோயிலில் ரூ.56லட்சம் மதிப்பீட்டில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணிகளுக்கு அடிக்கல் விழா நடைப்பெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பங்கேற்றார்.
புள்ளம்பாடியை அருகே வரகுப்பை கிராமத்தில் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது, தொடர்ந்து சன்னதிகள், பிரகாரங்கள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்ற. இந்நிலையில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகளுக்காக ஆணையர் பொது நல நிதியிலிருந்து ரூ. 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், உதவி செயற் பொறியாளர் கவுதமன் மற்றும் புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், செயல் அலுவலர் நித்தியா ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் பெருமாள், துணை தலைவர் அண்ணாதுரை மற்றும் வரகுப்பை கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.