அமிர்த வித்யாலா பள்ளியில் உலக யோகா தினம்
திருச்சி, ஜுன் 21 திருச்சி அமிர்த வித்யாலா பள்ளியில் உலக யோகா தினம் இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. சிறப்பு விருந்தினராக மதுரை விவேகானந்தா சேவா சமிதி மேலாளர் கிருஷ்ணசுவாமி தலைமையேற்று துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் உஷா ராகவன் வரவேற்புரையாற்றி வாழ்த்துரையும் கூறினர். இதில் பள்ளி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளியின் உடல் கல்வி மற்றும் யோகா துறை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர்