சிறுமியின் கல்வி கட்டணத்திற்கான காசோலை வழங்கல்
திருச்சி, ஜூன் 21 திருச்சி மாவட்டத்திற்கு கடந்த 8 ஆம் தேதி வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்த்த கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு உதவிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைற்ற அனைத்து திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறுமியின் கல்வி கட்டணத்திற்காக ரூ. 61,000க்கான காசோலையினை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்சமது, இனிகோ இருதயராஜ் ஆகியோர் உள்ளனர்.