எல்.ஐ.சி. முகவர்களுக்கான சங்கத் தேர்தல்
திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம் துறையூர் லைஃப் இன்சூரன்ஸ் ஆப் கார்ப்பரேஷன் முகவர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிர்வக தலைவர்கான தேர்தலில் முன்னள் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் மதியழகன் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது நண்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது இதில் மொத்தம் மொத்தம் 161 வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த நிலையில் விறுவிறுப்பான தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக துறையூர் எல்.ஐ.சி முகவர் முத்தையன் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், குளித்தலையை சேர்ந்த கணேசன் ஆகியோர் இருந்தனர். இன்று காலை 9 மணி அளவில் நடைபெற தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. இதில் மொத்த 126 வாக்குகள் பதிவாகியது இதில் போட்டியிட்ட கமலக்கண்ணன் 25 வாக்குகளும் மதிவாணன் நூத்தி ஒரு வாக்குகளும் பெற்றனர். அதிக வாக்குகள் பெற்ற மதிவாணன் வெற்றி பெற்றதாக தேர்தல் குழு பொறுப்பாளர்கள் அறிவித்தனர்.