தி.மு.க வை யாராலும் அழிக்க முடியாது.கனிமொழி எம்.பி. பேச்சு

0 372
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 22திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு, கட்சியின் 100 அடி உயர கொடிகம்பத்தில் கழக கொடியேற்றி வைத்து பேசுகையில்,
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் மேம்படுத்திட கலைஞர் எண்ணற்ற திட்டங்களை தீட்டினார். குடிசை மாற்று வாரியம், கண்ணொளி திட்டம் இப்படி எண்ணற்ற திட்டங்களை தந்தவர் தான் மறைந்த முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆனால் கொள்கையோடு இருக்கும் தி.மு.கவை சீண்டிப்பார்க்கிறார்கள், அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று பேசினார்.
விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாவட்ட அவைத் தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் குணா, கவிஞர் சல்மா, வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீரங்கன், மணப்பாறை நகர செயலாளர் மு.ம.செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மருங்காபுரி ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பழனியாண்டி, சின்னடைக்கன், துவரங்குறிச்சி நகர செயலாளர் மும்பை நாகராஜன், ஒன்றியக்குழு தலைவர்கள் மணப்பாறை அமிர்தவள்ளி, வையம்பட்டி குணசீலன், வழக்கறிஞர். கிருஷ்ணகோபால், வையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா சுப்பிரமணியன், மற்றும் திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.