அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
திருச்சி, ஜுன் 22 அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று அதிமுகவினர் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட, 3 பிரிவுகளின் கீழ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மோகன், பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்பி குமார் உள்ளிட்ட, 700 பேர் கோட்டைகாவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.