கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0 267
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 22 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் உயிர் காத்திட விபத்தில்லா மின்வாரியம் அமைத்திட வேண்டும். 60,000 காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும். தேர்வு செய்யப்பட்டுள்ள 5,000 கேங்மேன் பணியாளர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளையும், கள உதவியாளர்களாக பணி மாற்றம் செய்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர் மற்றும் பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் கோட்ட தலைவர் அந்தோனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.