தொண்டாமுத்தூரில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா
தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று( 22/06/2023) காலை 9.30 மணிக்கு தளபதி விஜய் 49 _வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கேக் வெட்டும் நிகழ்ச்சியும், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவிற்கு தொண்டாமுத்தூர் ஒன்றிய தலைவர் சி. வெள்ளைச்சாமி தலைமையற்றார். விழாவில் கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். விஜய் யுவராஜ் அவர்கள் , மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்கள் தளபதி மகேஷ், சி.வி. எஸ். தினேஷ், சமத்துவ ரவி, மாவட்ட நிர்வாகிகள் தீபக், அருண்குமார், நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி முக கவசம், மதிய உணவு வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் எம். சதீஷ் ,பொறுப்பாளர் நவீன் குமார், அமைப்பாளர் ஆனந்தகுமார், கௌரவ ஆலோசகர் பழனியப்பா மெடிக்கல் உரிமையாளர் சுரேஷ், துணைத் தலைவர்கள் ஹரிஹரன், விஷ்ணு, துணை செயலாளர்கள் எஸ். கார்த்திக், சரவணன், துணைப் பொருளாளர் நவீன் குமார், துணை அமைப்பாளர் பகவதி செந்தில், நிர்வாகிகள் லியோராஜ், ஜில்லா சின்னா, ரமேஷ், விக்னேஷ், ஒன்றிய நிர்வாகியும், செய்தி தொடர்பாளருமான சி. வருண், உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு முகக்கவசம் மற்றும் மதிய உணவு வழங்கினர்.
தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
விழா நிறைவாக நவீன் குமார் நன்றி உரை நிகழ்த்தினார்.