துறையூரில் நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்

0 399
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 22 திருச்சி மாவட்டம் துறையூரில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர் மன்ற நகரத் தலைவர் ரவிவர்மா மற்றும் ஒன்றிய தலைவர் அலெக்ஸ் ஆகியோரின் தலைமையில் இன்று விஜயின் 49 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக துறையூரில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விஜய் ரசிகர் மன்ற சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துறையூர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் ரவிவர்மா, செயலாளர் முரளி, கிஷோர், சண்முகம், விஜய், தியானேஷ்,மிதுன், பிரவீன், வி விஜய் மற்றும் ஒன்றிய தலைவர் அலெக்ஸ்,டேவிட், ரஞ்சித், கரன், சண்முகா, சரவணன், நவீன், ஜீவா, பிரதீப்,பிரசாந்த் உள்பட நிர்வாகிகள்திரளாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.