தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

0 277
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போலீசார் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி., ராமநாதன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் போலீசார் மற்றும் ஜேசிஜ மணவை கிங்ஸ், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கங்த்தின் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தலைக்கவசம் அணிந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தலைக்கவசம் அணிவதால் உயிரிப்பை தடுக்க முடியும் என்றும் வாகன விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று போலீஸார் தரப்பில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இதில் ஜே சி ஐ மனைவை கிங்ஸ் தலைவர் ஜெயம் சி.சக்திவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேசன் ஜே.சி.ஐ., மண்டல துணைத் தலைவர் யுவராஜ் மண்டல இயக்குனர்கள் சதீஷ்குமார், வழக்கறிஞர் முல்லை. சந்திரசேகர், பிரபு, அருள்முருகன், மற்றும் மணவை கிங்ஸ் உறுப்பினர்கள், இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நல நல்லாண்டவர் சங்கத் தலைவர் ராஜகோபால், மாரியம்மன் சங்கத் தலைவர் சரவணன், முனியப்பன் சங்கத் தலைவர் நாகராஜ் மற்றும் காவல் துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.