எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு விழாவை சிறப்பாக நடத்த தீர்மானம்
திருச்சி, ஜுன் 26 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தல் கழக நிறுவனர், முன்னாள் தமிழக முதல்வர், புரட்சிதலைவர் அவர்களின் திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் விழா ஏற்பாடுகள் செய்வது எனவும், கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவினை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டத. இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, பகுதி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
