நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கண்டித்து விளக்கப் பொதுக்கூட்டம்

0 272
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூரில் விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கண்டித்து விளக்கப் பொதுக்கூட்டம் மக்கள் அதிகாரம் சார்பில் மக்கள் அதிகாரம் பெருவளப்பூர் நிர்வாகி முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய போது விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை 10 சதவீதம் முதல் 23 சதவீதம் வரை மட்டுமே கிடைக்கிறது.உற்பத்தி அதிகமானால் விலை கிடைக்காமல் தெருவில் கொட்டுவதும் நட்டமடைவதும் நடக்கிறது. இதனால் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை செய்து வருகின்றனர். ஆனால் விவசாயத்தை ஒழித்துக்கட்டும் பொருளாதாரக் கொள்கையை கொண்டுள்ள மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சனைக்கு செவி சாய்க்காமல் விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் வகையில் செயல்படுகிறது. உலகை சூறையாடுகின்ற வேளாண் கார்பரேட்டுகள் கையில் இந்திய விவசாயத்தை முழுமையாக ஒப்படைக்க வேகமாக வேலை செய்கிறது. இதற்கு ஒத்துழைக்கும் வகையில் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 தமிழகத்தை ஆளும் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. இதன் நோக்கம் தமிழக விவசாயிகளிடம் உள்ள மொத்த விளைநிலங்களையும் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு பிடுங்கி கொடுக்க முயல்கிறது.

மத்திய அரசின் டிஜிட்டல் வேளாண்மை சட்டம், 3 வேளாண் சட்ட திருத்தங்கள் மற்றும் தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 போன்ற விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முறியடிக்க விவசாயிகளாகிய நாம் சாதி மத பேதமின்றி ஓரணியில் திரண்டு போராடுவதே, உறவு வழியாக இருக்கிறது.

இந்த பொது கூட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் தலைவர்கள் உள்ளிட்ட உரையாற்றினார். மக்கள் அதிகாரம் நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.