புதைவடிகால், குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்

0 290
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்டப்பணிகள், அம்ருத் புதைவடிகால் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ.) சிவபாதம், மண்டல தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி, கண்ணன், ஆண்டாள் ராம்குமார்,பி.ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்,ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.