கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

0 432
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் காவல்துறைனிர்ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணப்பாறைப்பட்டி ரோட்டில் உதயம் திரையங்கரம் அருகில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (24), கட்டுப்பட்டியைச் சேர்ந்த கேசவ பாண்டியன் (20), அண்ணாவிநகரைச் சேர்ந்த வினோத்குமார் (20), காந்திநகரைச் சேர்ந்த சிவனேசன் (57) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, மூன்று மொபைல் போன்கள் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.