மது அருந்துவோரின் கூடாராமாக மாறி வரும் கீழப்புலிவார் ரோடு : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

0 403
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3 திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபு ரோடுக்கும் கீழப்புலிவார் ரோடுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து சிறு சிறு சந்துகளிலும் இளைஞர்கள் மது அருந்துதல் போதை மருந்து உட்கொள்ளுதல் மற்றும் சிறு வயது சிறுமி மற்றும் பெண்களை அழைத்துவந்து பொது இடங்களில் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தட்டிக் கேட்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும் கல்லை எடுத்து அடிக்கவும் வருகின்றனர். காவல்துறை இதற்கு தக்க நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் வசிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றனர். இதை காவல் துறை கவனத்தில் கொண்டு உடனே தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு வரும் காவல்துறையினர்களும் சிறு சிறு சந்துகளுக்குள் வருவதில்லை என்ற தைரியத்தில் திறந்தவெளி மதுபானக்கூடம் போல அமர்ந்து கொண்டு மது அருந்துதல் போதைப்பொருள் உபயோகித்தல் போன்ற செயல்கள் நடக்கின்றது. இதுகுறித்து புகார் அளித்த ஒருநாள் மட்டுமே காவல்துறையினர் இங்கு வந்துவிட்டு போய் விடுகிறார்கள். அதன் பிறகு வழக்கம்போல அவர்கள் தங்கள் வேலையை காட்டுகிறார்கள். இந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் கீழப்புலிவார் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், இதுகுறித்து இந்த பகுதி மக்கள் தான் புகார் அளித்தார்கள் என்று உடனடியாக அவர்களுக்கு தகவல்கள் தெரிந்துவிடுகிறது.  அதன் பிறகு அவர்கள் டியூப் லைட் மற்றும் மது பாட்டில்களை வீட்டில் விட்டு எறிகிறார்கள்.    எனவே தான் பொதுமக்கள் புகார் அளிக்க பயப்படுகிறார்கள்.  இதற்கு நேரம் காலமே கிடையாது. ஒவ்வொரு நாள் இரவு ஒரு மணி இரண்டு மணி வரை கூட அமர்ந்து இருக்கிறார்கள். புகார் அளித்தது யார் என்று  அவர்களுக்கு தெரிந்தால் எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே கோட்டை காவல்துறையினரின் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.