மின்கம்பியில் சிக்கிய விளம்பர பதாகை

0 239
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நகரின் பிரதான சாலையாக உள்ள புதுத்தெரு கடைவீதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான கட்டித்தின் இரண்டாவது தளத்தில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த  நிறுவனத்தின் விளம்பர பதாகை ஒன்று திடீரென காற்றில் பறந்து  மின்கம்பியில் மாட்டிக் கொண்டு தொங்கியது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை உடனடியாக நிறுத்தி விளம்பர பதாகையை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.