கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு

0 307
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6 முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகரம் கிராப்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.