பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி திறப்பு
திருச்சி, ஜூலை 6 திருச்சி மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டம் 2022 -2023ன் கீழ் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் கருமண்டபம் தெற்கு தெரு பகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின் மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். மேலும் சின்ன கொத்தமங்கலம் பகுதியில் நவீன பொது கழிப்பிடம் மற்றும் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின் மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டியை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,மேயர் அன்பழகன், நகர செயற்பொறியாளர் சிவபாதம், வட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா தேவி,பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..