லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம்

0 365
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடைபெற்றது.திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. 12 ந்தேதியான நேற்று நடைபெற்ற எள் ஏலத்தில் லால்குடி வட்டாரபகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 76.96 குவிண்டால் எள் கொண்டுவந்து ஏலத்தில் கலந்துகொண்டனர்.

திருச்சி விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் மேற்பார்வையாளர்களவிவேக் மற்றும் சங்கீதா,வேளாண் வணிகம் உதவி வேளாண்மை அலுவலர் சிவசக்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர் மற்றும் இலால்குடி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.17520 ம் குறைந்தபட்சமாக ரூ.13000 ம் மற்றும் சராசரியாக ரூ.16500 க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைப்பெற்ற எள் ஏலத்தில் ரூ.12 லச்சத்து 35 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது என வேளாண் வணிக அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் 9489477173, 8489880412, 9965137998 என்ற எண்ணை தொடர்ப்புகொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.