பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

0 296
Stalin trichy visit

நம்பர் 1 டோல்கேட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் நடைபெற்றது .இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களுக்கு கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களை குறித்து விரிவாக சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது பெண்களுக்க்கான கழிவறை அமைத்துக் கொடுத்த திட்டம், கேஸ் கனெக்சன் திட்டம், ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு, கிராம மற்றும் நகர்ப்புறத்தில் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்து சிறப்பு உரையாற்றினார்.

மண்ணச்சநல்லூர் மத்திய மண்டல தலைவர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.மாவட்ட பார்வையாளர் லோகிதாசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மனோகர் ராஜன், ராஜேந்திரன் பொதுச்செயலாளர்கள் அன்பில் சபரி, பாபு மகராஜன், பொண்ணுவேல் ,மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துலட்சுமி மற்றும் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், தகவல் தொழில் நுட்ப அணியினர், பாஜக நிர்வாகிகள் பொது மக்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்ப்பட்டோர் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.