ஊராட்சியில் கழிவுகளை குறைக்க விழிப்புணர்வு முகாம்

0 314
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி, சூர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (தெறி) சார்பில் கழிவுகளை குறைக்க அறிவுறுத்தும் விழிப்புணர்வு முகாம் வையம்பட்டி ஊராட்சி பகுதியான லெட்சம்பட்டியில்  நடைபெற்றது. இந்த விழாவிற்கு வையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா.சுப்பிரமணியன்  தலைமை வகித்து குப்பைகளை பிரிக்காமல் போடுவதால் ஏற்படும் பிரச்சனைகளையும், மக்கள் எவ்வாறு நாம் எவ்வாறு குப்பைகளை கையாண்டு நம் சுற்றுப்புற சூழ்நிலையை சுத்தமாக வைத்தும், தங்களையும் எவ்வாறு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கிக்கூறினார். கல்லூரி முதல்வர் புவனா குப்பைகளை எவ்வாறு பிரித்து கொடுக்க வேண்டும் என்பதற்கான செய்முறை விளக்கம் வழங்கினார்.  சூர்யா நினைவு அறக்கட்டளையின் தாளாளர் நாகலட்சுமி நமது பகுதியில் விளையும் தானியங்களையும் , நமக்கு கிடைக்கும் பழங்களையும் பயன்படுத்தி நாம் நலமாக வாழ்வது என்பதை பற்றிய அறிவுரை வழங்கினார். ஃபார்ம் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார். இறுதியில் தெறி நிறுவனத்தில் இருந்து வருகை புரிந்த பல்லவி சிங்  சீனியர் ப்ரோக்ராம் அலுவலர் நன்றியுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.