அனுமதியின்றி இயங்கும் சலவை ஆலை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி ஜூலை 21 திருச்சி மாவட்டம் , புத்தாநத்தம் ஊராட்சி , வெள்ளைய கவுண்டம்பட்டி
கிராமத்தில் லட்சுமணன் என்பவர் கடந்த ஓராண்டாக எந்தவித முறையான அனுமதி இன்றி சலவை ஆலையை நடத்திக் கொண்டு வந்துள்ளார். அவருடைய சலவை ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் வழியாக செல்வதால் இதனால் கடுமையான துர்நாற்றம்வீசுகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். மற்றும் நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழலில் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றன. எனவே மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.