பள்ளி கல்வி துறை சார்ப்பில் மாபெரும் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா!

0 244
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 21 திருச்சி மாவட்டம்,  துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் மாணவர்களிடையே நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி மற்றும் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தொடங்கிவைத்தனர் .இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் பொழுது மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாக வருவதற்கு அவர்கள் அறிவுத்திறமையை மேம்படுத்துவதற்காக அரசு சார்பில் அவர்களுக்கு 197 வகையான நூல்கள் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது என்றும் இதனை படிப்பதினால் அவர்களுக்கு எதிர்காலம் மிகவும் சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்தார் மேலும் அமைச்சர் கே என் நேரு பேசுகையில் தமிழகத்திலேயே முதன் முதலாக மாணவர்களிடையே நூலக வாசிப்பு இயக்கத்தை திருச்சி மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது என்றும் திருச்சி மாவட்டத்தில் கலைஞர், எம்ஜி ஆர் ஆகியோர் தங்களது திட்டங்களை முதன் முதலாக தொடங்கியது இன்று வரை நடைமுறையில் உள்ளது என்றும் கூறினார். மேலும் தமிழக முதல்வருக்கு மருத்துவமும் கல்வியும் இரு கண்கள் போன்றது என்று கூறினார். மேலும் துறையூர் பகுதிக்கு ஒரு அரசு கல்லூரி கொண்டு வருவோம் என உறுதியளித்துள்ளார் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன் ஸ்டாலின் குமார் உள்பட மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் சிவக்குமார் மற்றும் முசிறி மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி துறையூர் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் உள்பட அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.