மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மகளிரணி ஆர்ப்பாட்டம்

0 273
Stalin trichy visit

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வை கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசே கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன்
காதிகிராப்ட் அருகே மாவட்ட துணை செயலாளர் விஜயா ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இதில் 500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை நிறுத்தவும், பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்..

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.