சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

0 445
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் உள்ள திருச்சி லால்குடி சாலையில் மோட்டார் பைக் மீதுஅடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.உடன் சென்ற மாணவன் காயமடைந்தார்.

லால்குடி அருகே அன்பில் கிராமத்தை சேர்ந்த சிவகுமாரின் மகன் 17 வயதான சசிகுமார்.அதேபோல் அன்பில் மங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் 17 வயதான குகன்.இவர்கள் இருவரும் நண்பர்கள்.
அன்பிலில் உள்ள அரசு பள்ளியில் இருவரும் பிளஸ்-2 படித்து வருகின்றனர். கடந்த 22 ந்தேதி இரவு சமயபுரம் மாகாளிக்குடியில் நடைபெறும் கபடி போட்டியை பார்ப்பதற்க்காக ஒரு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். மாந்துறை பகுதியில் சென்றபோது மோட்டார் பைக் மீது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு தப்பிச் சென்றது. இதில் சசிகுமார் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள், படுகாயத்துடன் கிடந்த சசிகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சசிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என கூறினார். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். உடன் வந்த குகன் காயம் அடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.