தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்கவிழா

0 270
Stalin trichy visit

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம், ஜமால் முகமது கல்லூரியின் பெண்கள் பிரிவு (27.07.2023) வியாழன் மாலை 4.00 மணியளவில் அம்மன்றத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக SCOPE என்னும் அமைப்பின் நிறுவனர் மற்றும் சமூக சேவகர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் சுப்புராமன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் அவர்களும், செயலாளர் கி. சதீஷ் குமார் , இணைச் செயலாளர் ஆர்.கே.ராஜா கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
சிறப்பு விருந்தினர் “நீர் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவரின் உரையில் மணித கழிவுகளை அகற்றாமல் இருப்பதால் ஏற்படும் மோசமான விழைவுகளைப் பற்றி தெழிவாக கூறினார். மேலும் அவற்றை சுத்தமான முறையிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விழைவிக்காத முறையிலும் அகற்றுவதற்கான பல்வேறு வழிகளைப் பற்றி விவரித்தார். மேலும் அக்கழிவுகளை மரம், செடி கொடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் துணை முதல்வர்  ஏ. ஃபமிதா பானு
மாணவிகளுக்கு தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி கூறினார்.

கல்லூரி பொருளாளர் – ஜமால் முகம்மது, பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம் என கூறி விழிப்புணர்வு நிகழ்வு செய்தார்.
உதவிச் செயலாளர் – அப்துல் சமது,
தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற கல்லூரி ஒருங்கிணைப்பாளர்டாக்டர். M.IL ஜஹானாரா, மற்றும் பல்வேறு துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஊமை நாடகம், நாடகம் மாணவிகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

இறுதியாக தேசிய கீ
தத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.