அனைருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதே தேசியக் கல்வி கொள்கை : என்.ஐ.டி. இயக்குநர்

0 227
Stalin trichy visit

அனைருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதே தேசியக் கல்வி கொள்கையின் நோக்கம் என்று என்.ஐ.டி இயக்குநர் கூறினார். என்.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் என்.ஐ.டி. இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது

தேசிய கல்விக் கொள்கை 2020(என் இ பி 2020)

27.7.23:தே.க.கொ. 2020(என் இ பி 2020)

தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் : தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது இந்தியாவை மையமாகக் கொண்ட கல்விமுறையை உள்ளடக்கி, அனைவருக்கும் உயர்தரக் கல்வியை வழங்குவதன் மூலம் இது நமது தேசத்தை ஒரு சமமான மற்றும் துடிப்பான சமூகமாக மாற்றுவதற்கு நேரடியாக பங்களிக்கிறது.

இந்த தே க கொ 2020(என் இ பி 2020) பல வழிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தே க கொ 2020 ஆனது இணையப் புரட்சிக்கு பின்னர், முந்தைய என் பி இ 1986க்கு (National Policy for Education 1986) மூன்றரை தசாப்தங்களுக்கு அடுத்து, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என் பி இ 1986/92 ஐ உருவாக்கியதிலிருந்து பல முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு புதிய கல்விக் கொள்கையை வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் காணும் இவ்வேளையில், இணையப் புரட்சிக்கு முன்னரே வடிவமைக்கப்பட்ட என் பி இ 1986/92-ஆல் கடந்த சில வருடங்களில் தீவிர மாற்றங்களை முன்னறிவிக்க முடியவில்லை. அப்போதிருந்து, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தையும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் நாம் சற்று பின்னடைந்து இருக்கிறோம். இன்றைய மாணவர்கள், தொழில்நுட்பங்கள் நிறைந்த சூழல்களில் பிறந்து வளர்ந்து வரும் தலைமுறையை சார்ந்தவர்கள்.

புதிய கல்விக் கொள்கையும் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களுடனான தொடர்பும்
புதிய தேசியக் கல்விக் கொள்கை மற்றும் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களின் (UNESCO Sustainable Development Goals) 4ஆம் இலக்கு, உலகளாவிய கல்வித்தரம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகிய குறிக்கோள்களைப் பகிர்ந்து கொள்கின்றன. வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களுக்கான 2030 திட்ட இலக்கு 4 ( எஸ் டி ஜி 4 ) இல் பிரதிபலிக்கும் உலகளாவிய கல்வி மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டில் இந்தியா “அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதிப்படுத்தவும்”, 2030 க்குள் “அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கவும்” முயல்கிறது.

என் இ பி 2020@தே.தொ.க திருச்சி

தேசியக் கல்விக் கொள்கை 2020 கொண்டுள்ள முக்கிய செயல் நோக்கங்களின் கீழ் பின்வரும் செயல் திட்டங்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

• அனுபவக்கல்வி
• ஆய்வு மாணவர்களுக்கான கல்வியியல் பயிற்சி
• ஆன்லைன் படிப்புகள்/ பலநிலை நுழைவு- வெளியேறுதல் விருப்பங்கள்
• பன்மொழிக்கல்வி மற்றும் பல்துறை சார்ந்த கல்வி

செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

தலைப்பு: முழுமையான பல்துறை சார்ந்த கல்விக்கான அனுபவக் கற்றல்.

• பட்டம் பெறுவதற்கு முன்னரே தொழில் முனைவதற்கான செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதி
• வேலை/தொழில்முனைவுக்கான பாதையாக திட்டம் / பயிற்சி
• வெளிநாட்டில் செமஸ்டர்/இன்டர்ன்ஷிப்பைத் தொடரவோ / தொழில்முனைவுக்காகவோ நேரத்தை விடுவிக்க இளநிலைப் பாடத்திட்டத்தின் காலவரிசையை மறுவரையறுத்தல்

 

தொழில் முனைவோர் முயற்சியை செயல்படுத்துதல்:

பின்வரும் நிபந்தனைகளுடன் கூடிய தொழில்முனைவு முயற்சிகளுக்கு இளநிலை மாணவர்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை படிப்பை இடைநிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்:

அ. இறுதிக்கு முந்தைய ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில் மட்டுமே மாணவர்கள் படிப்பை இடைநிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்

ஆ. அங்கீகரிக்கப்பட்ட CEDI, STIC போன்ற தொழில் முனைவோர் காப்பக மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது நிதியளிப்பு நிறுவனங்களிலிருந்து நிதியுதவிக்கான ஆதாரம் தேவை.

இ. பெற்றோர்/பாதுகாவலரிடமிருந்து படிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஒப்புதல் கடிதம் தேவை.

ஈ. அத்தகைய மாணவர்கள் கல்லூரி விடுதியில் தொடர்ந்து தங்க அனுமதிக்கப்படுவர்.

முன்னாள் மாணவர்கள் வணிகத் தலைவர்களால் கற்பிக்கப்படும் “பொறியாளர்களுக்கான வணிகம் மற்றும் தொழில் முனைவோர்” பற்றிய தேர்வு பாடம்.

தொழில்முனைவு என்பது வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக உள்ளது. இதன் பொருட்டு, “பொறியாளர்களுக்கான வணிகம் மற்றும் தொழில்முனைவு” (Business & Entrepreneurship for Engineers) எனும் தேர்வு பாடம், கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன் பாடநெறி கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களால் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஸ்டார்ட்-அப் இந்தியா என்ற கருப்பொருளை மாணவர்கள் மனதில் விதைக்கும் இந்தப் பாடத்தின் மையமாக அனுபவக் கற்றலே உள்ளது.
இப்பாடத்தில் சேரும் மாணவர்கள் தம் தொழில் திறனைக் கல்வியாளர்களின் உதவியுடன் மேம்படுத்திக் கொள்கின்றனர். சுயசார்பு பாரதத்தின் தத்துவத்தை ஒட்டி நடத்தப் பெறும் இந்த முன்னெடுப்பானது, மாணவர்களை வேலை தேடுபவர்களுக்கு மாறாக, வேலைகளை உருவாக்குபவர்களாக ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தகவமைப்புக் கல்விமுறை – இளநிலைப் பாடத்திட்டத்தில் இறுதி ஆண்டு செயல் திட்ட (ப்ராஜெக்ட்) காலவரிசை மற்றும் மாணவர்குழு

அ. நிதியுதவி பெற்ற, குறைந்த காலக்கெடுவுடன் கூடிய திட்டப்பணிகள், திட்டத் தேவைகளைப் பொறுத்து, எந்தவொரு இளநிலை ஆண்டிலிருந்தும் மாணவர்களைச் சேர்க்க உள் விளம்பரங்களை ஆசிரியர்கள் வெளியிடலாம்.

ஆ. ஜூனியர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் (3வது செமஸ்டர் முதல் தகுதியுடையவர்கள்) அத்தகைய திட்டப் பணிகளை மேற்கொள்வர். அத்தகைய மாணவர் குறைந்தபட்சம் 3 செமஸ்டர்களுக்கு திட்டப்பணியைத் தொடர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்களால் கிரேடுகள்/கிரெடிட்களை பெறத் தகுதியடைவார்.

இ. நிதியளிப்பு நிறுவனங்களின் நிதி இருப்பு மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய மாணவர்களுக்கு திறமைகளை ஈர்க்கவும் , அர்ப்பணிப்பை வளர்க்கவும் தகுந்த ஊதியம் கூட வழங்கப்படலாம்.

ஈ. எட்டாவது செமஸ்டருக்கு முன் இளநிலை செயல்பாடு மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உ. பல்துறைச் செயல் திட்டத்தைப் பெறுவதற்கு மைனர் பாடங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் அத்தகைய மாணவர்கள் ஆசிரியரின் ஆய்வுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.

ஊ .தேசியப் போட்டிகள்/ தொழில்நுட்ப மாணவர் குழுக்களால் நடத்தப்படும் செயல்திட்டங்கள் எ.கா. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான், IIT/NIT ஆல் நடத்தப்படும் சங்கம் (பிரக்யான்), சாஸ்த்ரா போன்ற தொழில்நுட்ப விழாக்களில் அரங்கேறும் செயல்திட்டங்கள் ஆசிரிய வழிகாட்டி(கள்) மூலம் பாராட்டத்தக்கத் தரம் வாய்ந்ததாகக் கண்டறியப்பட்டால், இறுதி செமஸ்டருக்கு முன்னதாகவே கிரெடிட்களைப் பெறத் தகுதிபெறலாம், மாணவர் திட்டப் பணியின் முழு ஆவணங்கள் மற்றும் முன்மாதிரி ஏதேனும் இருந்தால், சமர்ப்பிக்கலாம்.

தலைப்பு: முனைவர் மாணவர்களுக்கான கல்வியியல் பயிற்சி

• பல ஆராய்ச்சி மாணவர்கள் பிற்காலத்தில் ஆசிரியர்களாக மாறுவார்கள்.
• மதிப்பீடு அடிப்படையிலான படிப்புகள் கற்பித்தல்/கல்வியியல்/எழுத்து ஆகியவற்றை எடுக்க வேண்டும்
• கற்பித்தல் அனுபவத்திற்கான குறைந்தபட்ச மணிநேரமும் இருக்கும்.

ஆய்வு மாணவர்களுக்கான கற்பித்தல் பணி

• அரசு மற்றும் அரசு சாராத நிதியுதவி திட்டங்களின் கீழ் உதவித்தொகை (ஹச் டி ஆர் ஏ) பெறும் மாணவர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

தலைப்பு: ஆன்லைன் படிப்புகள்/ பல நிலைகளில் இணையும்- இடைநிற்கும் வாய்ப்புகள் (Multiple Entry-Exit Options)

பயிலகங்கள் தங்கள் சேவை மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், மொத்தப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கும், வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், திறந்தவெளி தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்கும்.

அதன்படி, கணிப்பொறிப் பயன்பாடு, கணிப்பொறிப் பொறியியல் மற்றும் மேலாண்மை ஆகிய மூன்று துறைகளும் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் முதுகலை பட்டம் வழங்கப்படவுள்ளது. இதிலும் பல நிலைகளில் படிப்பைத் தொடரவும் இடைநிறுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிலகம், குறிப்பாக எஃகு தொழில்துறையில் பணிபுரியும் நிபுணர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த எஃகு தொழில்நுட்பத்தில் சான்றிதழுடன் கூட வகுப்புகளை வழங்க இருக்கிறது.

தலைப்பு: பன்மொழித் தன்மை
மாணவர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, இப்பயிலகம் தொன்றுதொட்டு தமிழக மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டையும், வெளி மாநில மாணவர்களுக்கு மீதி 50% இட ஒதுக்கீட்டினையும் வழங்கி வருகிறது. எனவே, தே.தொ.க , தன் அமைப்பில் தமிழ்மொழியினை அறியாத மாணவர்களை 50% கொண்டுள்ளது.

இந்தச் சூழலை உணர்ந்த திருச்சி தே.தொ.க, தமிழ் அறியாத மாணவர்களுக்கு தமிழ் – 100 என்ற அடிப்படைப் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேபோல், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கோதே பயிலகத்துடன் இணைந்து, ஜெர்மன் மொழிப் பாடத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட A1 மட்டத்தில் ஜெர்மன் மொழிச் சான்றிதழைப் பெறுவதற்கு நேரடியாக உதவுகின்றது.

தலைப்பு: கல்வி மற்றும் பல்துறை ஒருங்கிணைந்த இளங்கலை பட்டங்கள் – தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி அறிவியல் சார்ந்த- இயற்பியல், வேதியல் மற்றும் கணிதத்துறைகள் மட்டுமன்றி மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளையும் கொண்டுள்ளது. உயர்கல்வி நிலையங்களில் கல்வித் துறைகளை உருவாக்க தே.க.கொ கட்டாயமாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனியே கல்வித்துறையை உருவாக்கி, அதன்மூலம் ஒருங்கிணைந்த இளங்கலை கல்வி படிப்புகளும் (B.Sc & B.Ed, B.A & B.Ed) வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

தலைப்பு: திறன் வளர்ச்சி
வளர்ந்து வரும் துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பி.எம்.கே.வி. திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு மையமாக தே.தொ.க திருச்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தானியங்கிவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற வளர்ந்துவரும் பாடங்களும் வழங்கப்படவுள்ளன.

தேசிய கட்டமைப்பை நோக்கி தே.தொ.க திருச்சி: சந்திராயன் திட்டம்

சந்திராயன் 3 திட்டத்தில் தே.தொ.கழகத்திற்கு இரண்டு பெருமைமிகு தொடர்புகளும் பங்களிப்புகளும் உள்ளன.

1) முன்னாள் மாணவர் இணைப்பு:
சந்திரயன் -3 இன் திட்ட இயக்குநர், திரு. ப வீரமுத்துவேல் என்பவர் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி ( முதுகலை தொழில்துறை பொறியியல் 2003 ) இன் முன்னாள் மாணவர். அவர் 2019 இல் சந்திராயன் -3 திட்ட இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு, அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைமையகத்தில் விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராக பணியாற்றினார். தனது தொழில்நுட்ப அறிவுத்திறனுக்காக அறியப்படுகிற வீரமுத்துவேல், சந்திராயன் -2 பணியில் முக்கிய பங்கு வகித்தார், நாசா உடனான பேச்சுவார்த்தைகளிலும் முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார்.

2) ஆசிரியர் இணைப்பு:
தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி நிலவின் மண்ணின் மாதிரியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி உள்ளது. நமது கட்டிட பொறியியல் துறையை சார்ந்த பேராசிரியர் முத்துக்குமரன் அவர்களும் சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகமும் இணைந்து நிலவில் உள்ள மணலை போன்று நமது உள்நாட்டிலேயே தயாரித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, இம்மணலை அனுப்பி உள்ளனர். நிலவில் தரையிறங்கும் வாகனம் (Lander), நிலவின் பரப்பை ஆய்வு செய்யும் வாகனம் (Rover) ஆகியவற்றை இயக்கிப் பரிசோதிப்பதற்காக இம்மணல் உபயோகிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் கிடைக்கப்பெறும் சில வகை பாறைகளை சேர்த்து காப்புரிமை கொண்ட ஒரு தொழில்நுட்பம் மூலமாக அப்பல்லோ 16 இல் இருந்து கொண்டுவரப்பட்ட உண்மையான நிலவின் மண்ணைப் போன்று உருவாக்கியுள்ளனர். பொதுவாக சோதனைக்கு 50 டன்களுக்கும் மேலான நிலவின் மண் மாதிரி தேவைப்படும். அது மிகவும் விலையுயர்ந்தது. ஆனால் நமது பயிலகம் அதனைப் போன்ற குணாதிசயம் கொண்ட மண்ணை குறைந்த பணத்தில் உருவாக்குவதில் பெரும் பங்காற்றி உள்ளது. இதனால் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்திற்கு நமது பயிலகம் மேலும் பங்களித்துள்ளது.
சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திடக் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டையில் தொடங்கியது…

சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் சீ.அ. மணிகண்டன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஆளுநரை சந்தித்து வழங்க இந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.