தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க கூட்டம்
திருச்சி,ஜூலை 28 தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் (TCOA ) சங்க கூட்டம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா கூட்டம் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாலுக்கா தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமை ஏற்று பேசினார். தாலுக்கா செயலாளர் திரு செந்தில் குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 60க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் தாலுக்கா செயல்பாடுகளை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் நமது TCOA சங்கம் நமது தொழில் மற்றும் ஆபரேட்டர்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது பற்றியும் விரைவில் அனைவருக்கும் TIC பைபர் இன்டர்நெட் கொடுப்பதற்கும் தாலுக்கா நிர்வாகதுடன் கலந்து ஆலோசித்து விரைவில் சிக்னல் கொடுக்கபடும் என்றும் பேசினார்.
மாவட்ட பொருளாளர் IPTV TECHNOLOGY பற்றி பேசினார்.
தாலுக்கா உறுப்பினர்கள் TCCL வில்லேஜ் பேக் குறைந்த கட்டணத்தில் கொடுக்க வேண்டும் என்றும் மணப்பாறை பகுதியில் நீண்ட தூரம் உள்ள ஊர்களுக்கு UG LINE மூலம் கொடுத்து உதவிடுமாறும், OLT, EDFA போன்ற உபகர்ணங்கள் உடனே பழுது சரி பார்க்க வசதியாக ஒரு சர்வீஸ் செண்டர் ஏற்படுத்தி தருமாறும் நமது மாநில தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.
நமது மாநில தலைவர் திரு வீரமுத்து அவர்கள் நமது சங்கம் எவ்வாறு அனைத்து ஆபரேட்டர்களையும் பாதுகாத்து வருகிறது என்றும் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றியும் நமது சங்கத்திற்கு ஏற்படும் செலவுகளை எப்படி சமாளித்து வந்துள்ளது என்பது பற்றியும் TCCL, TIC INTERNET உடனே அனைவரும் எடுத்து வருங்கால தொழில் நுட்பதிற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், IPTV தொழில்நுட்பம், பற்றியும் சிறப்புரை வழங்கினார்.
சங்க உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், கோரிக்கைகளையும் குறித்து கொண்டு பதில் வழங்கினார் மிகவும் பயனுயுள்ளதாக இருந்தது.
மாநில துணை செயலாளர் திரு சிவக்குமார் அவர்கள் சங்கத்தினால் நாம் பெரும் பயன்கள் பற்றியும் சங்கமாக இருந்தால் தான் எதையும் நாம் பெற்றிட முடியும் என்று சிறப்புரை வழங்கினார்.
தாலுக்கா நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று தாலுக்கா தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் வாழ்த்துக்கள் வழங்கினார்.
தாலுக்கா பொருளாளர் திரு சிவக்குமார் அவர்கள் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.